திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (16:30 IST)

இயக்குனராக ஆசைப்பட்ட சீரியல் நடிகை… அதற்காக சொந்த வீட்டிலேயே கைவைத்த கணவன்!

தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சொந்த வீட்டிலேயே நகைகளைத் திருடியுள்ளார் ஒரு நபர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மாளிகைமேடு பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் நேற்று காலை பீரோவில் இருந்த நகைகள் திருடப்பட்டன. இது சம்மந்தமாக போலீஸாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நடத்திய விசாரணையில் விவசாயியின் மகனே தன் சொந்த வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவரிடம் நடத்திய விசாரணையில் சீரியலில் நடித்து வரும் தன் மனைவி ஒரு படம் இயக்க ஆசைப்பட்டதாகவும், அதற்கான பணத்தேவைக்காக நகைகளை திருடியதாகவும் சொல்லியுள்ளார். இதையடுத்து போலிஸார் அவரைக் கைது செய்ய அவரது மனைவி பரமேஸ்வரி தலைமறைவாகியுள்ளார். இந்த சம்பவமானது மணிகண்டனின் பெற்றோருக்கு மிகுந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.