1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 23 மார்ச் 2023 (13:07 IST)

ஐஸ்வர்யாவின் பினாமி நான்.. ஈஸ்வரி கூறிய அதிர்ச்சி தகவல்..!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடிய ஈஸ்வரி என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தன்னுடைய கணவரிடம் தான் நான் ஐஸ்வர்யாவின் பினாமி என கூறி ஏமாற்றியது தற்போது தெரியவந்துள்ளது. 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடியதாக கைது செய்யப்பட்ட ஈஸ்வரி இடம் தற்போது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவரிடமிருந்து நகைகள் ரொக்கம் மற்றும் நில பத்திரம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் மாதம் முப்பதாயிரம் சம்பளம் வாங்கும் ஈஸ்வரிக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது என அவரது கணவர் கேட்டபோது தான் ஐஸ்வர்யாவின் பினாமி என்றும் அவருடைய சொத்துக்களை பாதுகாக்கிறேன் என்றும் அவர் கணவரிடம் பொய் கூறியுள்ளதாக தெரிகிறது. 
 
மேலும் வெளியுலகத்துக்கு தான் இது நமது வீடு ஆனால் உண்மையில் இது ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு சொந்தமானது என்று கணவரிடம் திறமையாக பொய் கூறியுள்ளார் என்பது தற்போது விசாரணையில் தெரிவு வந்துள்ளது.
 
Edited by Siva