வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 11 மே 2023 (17:07 IST)

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்கள்: கோவையில் ஆச்சரியம்..!

சமீபத்தில் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்த தேர்வு எழுதிய இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
கோவை வடவள்ளி என்ற பகுதியைச் சேர்ந்த நிரஞ்சன் மற்றும் நிவேதா ஆகிய இருவரும் இரட்டை குழந்தைகள். இருவரும் இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய நிலையில் இருவரும் 530 என்ற ஒரே மதிப்பெண்கள் பெற்றுள்ளதால் ஆச்சரியமாக உள்ளது. 
 
இவ்வளவுக்கும் இரட்டையர்களில் நிவேதா ஆர்ட்ஸ் குரூப்பும் நிரஞ்சன் சயின்ஸ் குரூப்பும் படித்து வந்தார்கள் என்பதும் இருவரும் தனித்தனி பாடப்பிரிவில் உள்ள மதிப்பெண்கள் வேறாக இருந்தாலும் 530 என்று ஒரே மதிப்பெண்ணாக வந்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
இதுகுறித்து நிவேதா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது எனக்கும் எனது உடன் பிறந்த அண்ணனுக்கும் பல வகைகளில் ஒற்றுமை உண்டு தற்போது மதிப்பெண்களிலும் ஒற்றுமை இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran