செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 10 மே 2023 (07:56 IST)

தமிழில் 100க்கு 138 மதிப்பெண், 600க்கு 514 மதிப்பெண். ஆனால் பெயில்.. யாருப்பா பேப்பர் திருத்தியது..?

தமிழில் 100 மதிப்பெண்ணுக்கு 138 மதிப்பெண் பெற்றதாகவும் மொத்தம் 514 மதிப்பெண் பெற்ற நிலையில் நான்கு பாடத்தில் தோல்வி என்றும் பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவி ஒருவருக்கு மதிப்பெண் பட்டியல் வந்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த தனித்தேர்வர் ஆர்த்தி என்பவர் கடந்த மார்ச் மாதம் பிளஸ் டூ தேர்வு எழுதிய நிலையில் அவர் நேற்று ஆன்லைன் தனது தேர்வு முடிவை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவரது மதிப்பெண் பட்டியலில் தமிழில் 138 மதிப்பெண், ஆங்கிலத்தில் 92 மதிப்பெண், கணிதத்தில் 56 மதிப்பெண், இயற்பியல் 75 மதிப்பெண், வேதியல் 71 மதிப்பெண், உயர் கணிதம் 82 மதிப்பெண் பெற்றதாக கூறப்பட்டுள்ளது. அவரது மொத்த மதிப்பெண்கள் 514 என்று இருந்தபோதிலும் அவர் நான்கு பாடங்களில் பெயில் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழில் மொத்தமே 100 மதிப்பெண் என்ற நிலையில் 138 மதிப்பெண் எப்படி வந்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து அவர் கல்வி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியபோது ஆன்லைனில் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பில் தவறு நிகழ்ந்துள்ளதாகவும் விரைவில் சரி செய்து அவரது உண்மையான மதிப்பெண் பட்டியலை தருவதாகவும் கூறியுள்ளனர்.

பிளஸ் டூ தேர்வு மதிப்பெண் பட்டியல் தயாரிப்பில் மெத்தனமாக இருந்ததை நெட்டிசன்கள் பலரும் கண்டித்து வருகின்றனர்.


Edited by Siva