ரஷ்ய அதிபரைக் கொல்ல இரண்டு முறை முயற்சி!
ரஷ்யா அதிபர் புதினை கொல்ல இரண்டு முறை முயற்சிகள் நடந்தாலும் அதில் அவர் தப்பித்துள்ளதாக ரக்ரைன் ராணுவ உளவுப் பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ராணுவ படைகள், உக்ரைன் மீது 80 நாட்களுக்கு மேலாக தொடந்து போரிட்டு வருகின்றனர். இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதினுக்கு ரத்தப் புற்று நோய் இருப்பதால், அவருக்கு வயிற்றிலுள்ள திரவகத்தை அகற்ற அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இது உறுதிப்படுத்தப்படவில்லை.
உக்ரைன் ராணுவ உளவுப் பிரிவின் தலைவர் கைரைலோ புடானோவ் கூறியுள்ளதாவது: கருங்கடலுக்கும் , ரஷ்யாவின் காஸ்பியன் கடலுக்கும் இடையே காகசஸ் என்ற இடத்தில் விளாடிமிர் புதினை கொல்ல முயற்சி நடந்ததாகவும், அதன் பின், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின் ஒருமுறை புடினை கொல்ல முயற்சி நடந்ததாகவும், அவர் உயிர்பிழைத்ததாக தெரிவித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.