திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Modified: புதன், 5 நவம்பர் 2025 (13:27 IST)

அதிமுக - பாஜக கூட்டணிக்கு அல்வா!... முதலமைச்சர் வேட்பாளராக விஜய் தேர்வு!..

அதிமுக - பாஜக கூட்டணிக்கு அல்வா!... முதலமைச்சர் வேட்பாளராக விஜய் தேர்வு!..
நடிகரும் தவெக தலைவருமான விஜய் மக்களை சந்திப்பதற்காக கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்க்க பல ஆயிரம் பேர் கூடியதில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி  உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் விஜயையும், தவெக நிர்வாகிகளையும் ஒரு மதமாக முடக்கி போட்டது.
 
ஒருபக்கம் அந்த சம்பவத்திற்கு விஜய்தான் முழு பொறுப்பு என விஜயை பிடிக்காதவர்களும், திமுகவினரும் தொடர்ந்து அவரை திட்டி வந்தார்கள். கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் சொல்லவில்லை என பலரும் பேசினார்கள் அதில் சில பிரச்சனைகள் இருந்ததால் பாதிக்கப்பட்டதில் 38 குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து விஜய் அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதோடு பாதிக்கப்பட்ட 41 குடும்பத்தினர் வங்கி கணக்கிலும் 20 லட்சம் செலுத்தப்பட்டது.
 
தற்போது அதிலிருந்து மீண்டு விஜய் கட்சி பணிகளை பார்க்க துவங்கியிருக்கிறார். பல புதிய குழுக்களையும் அமைத்திருக்கிறார். இந்நிலையில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை மற்றும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க அமைக்கும் வியூகங்கள் ஆகியவற்றை பற்றி ஆலோசனை செய்ய சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் விஜயின் தலைமையில் நடைபெற்றது. அதில் சுமார் 2000 பேர் வரை கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கியதும் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவ்வர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
 
அதன்பின் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் 2026 சட்டமன்ற தேர்தலில் அமைக்கப்பட வேண்டிய கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்க தாவெக தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கியும், முதலமைச்சர் வேட்பாளராக விஜயை அறிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

கரூர் சம்பவத்திற்கு பிறகு எந்த பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த விஜய் தற்போது பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பது நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
அதிமுக - பாஜக கூட்டணிக்கு அல்வா!... முதலமைச்சர் வேட்பாளராக விஜய் தேர்வு!..
 
ஒருபக்கம், விஜயை அதிமுக-பாஜக கூட்டணிக்கு இழுக்கும் முயற்சிகள் நடந்து வந்த நிலையில், முதலமைச்சர் வேட்பாளராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அதிமுகவின் கோரிக்கையை தவெக நிராகரித்திருப்பதையே காட்டுகிறது.