செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 5 நவம்பர் 2025 (13:01 IST)

கரூர் சம்பவம் உள்பட தவெக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள்..!

Vijay
தமிழக வெற்றி கழக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
இதோ:
 
கரூரில் நடைபெற்ற கழக பிரசாரத்தின்போது, தமிழக அரசால் திட்டமிட்டு பாதுகாப்பு குறைபாடுகளுடன் நிகழ்ந்த அசம்பாவிதத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 
 
சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
 
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
 
எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை கழகத் தலைவர் விஜய்க்கு வழங்குவது.
 
தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியைக் கைவிட்டு, ஏற்கனவே உள்ள நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
 
தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரம் மற்றும் மக்கள் சந்திப்புக் கூட்டங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு, தமிழக அரசு பாகுபாடின்றிப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
 
முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்களின் மூலம் ஈர்க்கப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் அதனால் உருவான வேலைவாய்ப்புகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
 
மழைநீர் வடிகால் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் உடனடியாக முடித்து, மழை வெள்ளத்திலிருந்து மக்களை அரசு பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
 
வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் என்று அறிவித்தது.
 
Edited by Siva