ஓம் காளி... ஜெய் காளி!.. விஜய்க்கு எதிராக மந்திரம் சொன்ன உதயநிதி ஸ்டாலின்!...
2026 சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பார்க்காதபடி தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விட்டது. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராகிவிட்டார். இது திமுகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
. கட்சி தொடங்கியவுடனேயே திமுகவை மட்டுமே குறி வைத்து பேசத் தொடங்கினார் விஜய். அதுவும் கரூர் சம்பவத்திற்கு பின் ‘திமுக ஒரு தீய சக்தி’ என கடுமையாக விமர்சித்தார். மேடைகளில் பேசும் போது ‘ஓம் சக்தி.. பராசக்தி. திமுக ஒரு தீய சக்தி. என முழங்கினார்..
ஒருபக்கம் வருகிற அக்டோபர் 6ம் தேதி தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சர் விஜய், உதயநிதி ஸ்டாலின், சீமான் ஆகியோர் அந்த இரண்டு தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
சமீபத்தில் மதுராந்தகத்தில் பேசிய முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்த போது ‘ஓம் சக்தி.. பராசக்தி.. திமுக ஒரு தீயசக்தி’ என பேசினார். இந்நிலையில் தாராபுரத்தில் நேற்று பிரச்சாரம் செய்த எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ‘ஓம் காளி.. ஜெய் காளி.. தவெக ஒரு ஓடுகாளி// இதுதான் புது மந்திரம்.. இனிவரும் திமுக கூட்டத்திலும் இதனை சொல்ல வேண்டும்’ என்று பேசினார். மேலும் இன்று நடக்கக்கூடிய ஆட்சி நாம் போட்ட பிச்சையில்தான் நடக்கிறது’ எனவும் பேசியிருக்கிறார்.