எங்களுக்கெல்லாம் பதவி இல்லையா?!.. படையெடுக்கும் தவெக நிர்வாகிகள்!. பனையூரில் பரபரப்பு!...
நடிகர் விஜய் இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி அக்கட்சியின் தலைவராக மாறினார். அதாவது முழு நேர அரசியல்வாதியாக மாறாமல் கொஞ்சம் சினிமா, கொஞ்சம் அரசியல். ஒருபக்கம் படத்தின் ஷூட்டிங், ஒருபக்கம் நிர்வாகிகளுடன் மீட்டிங் என செயல்பட்டு வந்தார்.
அதேநேரம், ஜனநாயகன் பட ஷூட்டிங் முடிந்தபின் விஜய் முழுநேர அரசியல்வாதியாக மாறினார். விழுப்புரம் மற்றும் மதுரை ஆகிய இரண்டு இடங்களிலும் தவெக சார்பில் பிம்ரமாண்ட அளவில் மாநாடும் நடத்தப்பட்டது. மேலும், ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கு சென்று மக்கள் சந்திக்கு கூட்டத்தையும் நடத்தினார் விஜய்.
அதேபோல் புதுச்சேரி, ஈரோடு ஆகிய இடங்களில் தவெக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் அனல் பறக்க பேசினார் விஜய். குறிப்பாக ஈரோட்டில் அவர் பேசிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தலில் குறிவைத்திருக்கும் விஜய் கட்சி பணிகளில் வேகம் காட்டி வருகிறார். தூத்துக்குடி மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு 8 மாவட்ட செயலாளர்களை இன்று நியமிக்கிறார் விஜய்.
இந்நிலையில், அதில் பொறுப்பு கிடைக்காத பலரும் அதிருப்தியில் தகவல் அறிந்து பனையூர் தவெக அலுவலகத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். தூத்துக்குடி, திருச்சியிலிருந்து ஏராளமானோர் தங்கள் ஆதரவாளர்களுடன் பனையூரை நோக்கி வருவதால் தவெக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.