வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 20 நவம்பர் 2020 (14:00 IST)

சென்னைக்கு வரவழைக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ பூங்கோதை: உயர்தர சிகிச்சைக்கு ஏற்பாடு!

சென்னைக்கு வரவழைக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ பூங்கோதை: உயர்தர சிகிச்சைக்கு ஏற்பாடு!
அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டதால் நெல்லையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக எம்எல்ஏ பூங்கோதை அவர்கள் உயர்தர சிகிச்சை அளிப்பதற்காக சென்னை வரவழைக்கப்பட்டு உள்ளார் 
 
நேற்று முன்தினம் திமுக எம்எல்ஏ ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பூங்கோதைக்கு திமுக நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து ஆலோசனை கூட்டம் முடிந்ததும் வீடு திரும்பிய பூங்கோதை அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டதாக கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து நெல்லையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு வரவழைக்கப்பட்டு உள்ள திமுக எம்எல்ஏ பூங்கோதை தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது