6 பேர் உயிரிழப்புக்கு காரணம் என்ன? திருப்பதி மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்காக இலவச டிக்கெட் வாங்க வரிசையில் நின்று இருந்தவர்கள் நெரிசலில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த விபத்து குறித்து திருப்பதி மாவட்ட ஆட்சியர் விளக்கமாக கூறியுள்ளார். அந்த விளக்கத்தில் தேவஸ்தானம் அமைத்த கவுண்டர்கள் பணியில் இருந்தவர்கள் மெயின் கேட்டை திடீரென திறந்து விட்ட காரணத்தினால் பக்தர்கள் ஒரே நேரத்தில் போட்டி போட்டுக் கொண்டு உள்ளே செல்ல முயன்றதாகவும், அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தான் இந்த அசம்பாவிதத்திற்கு காரணம் என்றும் கூறியுள்ளார்.
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கேட்டை திறந்து விட்ட போலீஸ் டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த சம்பவத்தில் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஆறு பேர் மரணம் அடைந்ததாகவும், காயம் அடைந்தவர்களில் 34 பேர் படுகாயம் அடைந்திருப்பதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மரணம் அடைந்த ஆறு பேரில் சேலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இருக்கிறார் என்றும், மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
Edited by Siva