செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 23 நவம்பர் 2018 (16:01 IST)

'சொந்த ஊருக்கே’ ஒண்ணும் செய்யாத டி.டி.வி.தினகரன் ! வருத்தெடுக்கும் நெட்டிஷன்ஸ்

கஜா புயலால் பாதித்த காவிரி டெல்டா பகுதி மக்களுக்கு தமிழ்நாட்டிலுள்ள சிறியோர் முதல் பெரியோர் வரை பலரும் தம்மால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர்.
இதுவரை திமுக,தேமுதிக, போன்ற கட்சிகள் மற்றும் நடிகர்கள் விஜய், கமல்ஹாசன் ,போன்றோர் பல லட்சம் நிவாரணத்தொகை கொடுத்து மக்களுக்கு உதவி உள்ளனர்.
 
இந்நிலையில் மன்னார் குடியை சேர்ந்த டிடிவி தினகரன் தமிழ் நாட்டில் எது எதுக்கோ குரல் கொடுத்து வந்தவர் தற்போது  தன் சொந்த ஊருக்கே இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வருத்தெடுத்து வருகின்றனர்.