வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 23 நவம்பர் 2018 (15:50 IST)

கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்த " தி லெஜெண்ட் "! எவ்வளவு கொடுத்தார் தெரியுமா?

நிவாரண நிதியாக ரூ. 1 கோடி அளித்தார் "தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்" தலைவர் லெஜண்ட் சரவணன்.
 
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடைகள் மூலம் உதவிட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி 3 தினங்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
 
அதன்படி தனியார், அரசு சாரா நிறுவனங்கள், தனிநபர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் தங்களால் முடிந்த உதவிகளை தமிழக அரசின் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடைகள் மூலம் உதவி வருகிறார்கள்.
 
முதல்வரின் இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு நிவாரண நிதியாக ரூ 1 கோடியை வழங்கினார் தி சரவணா ஸ்டோர் லெஜெண்ட் உரிமையாளர் சரவணன். 
 
மேலும் பேசிய அவர் இந்த இத்தருணத்தில் நம் தமிழக மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். புயலால் துயரத்தில் ஆழ்ந்துள்ள நம் சகோதர, சகோதரிகளுக்கு நாம் அனைவரும் நம்மால் இயன்ற சிறிய உதவியோ, பெரிய உதவியோ செய்து இத்துயரத்தில் இருந்து அவர்கள் விரைவில் மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்ப அனைவரும் ஆதரவு தந்து தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
 
நம் விவசாய நண்பர்கள் கஜா புயலின் தாக்குதலால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். கஷ்டம் நஷ்டம் அனைவரின் வாழ்விலும் வரும் போகும், எதுவும் நிரந்தரம் இல்லை. மனவுறுதியுடனும், நம்பிக்கையுடனும் செயல்பட்டால் இவ்வுலகில் வெற்றி பெற்று மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். இதற்கு நம் தமிழக மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு விவசாயிகளுக்கும் பக்கபலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
 
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.