வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 30 மார்ச் 2024 (17:53 IST)

டிடிவி. தினகரனை கண்டு பயந்தது உண்மைதான்- ஆர்.பி. உதயகுமார்

udhayakumar
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல்  ஒரே கட்டமாக நடக்கிறது. இதையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
தமிழகத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, புரட்சிப் பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. சமீபத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியாகி வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த நிலையில், மதுரை வாடிப்பட்டியில் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:

டிடிவி தினகரன் இனியும் தனது வாய்ச் சவடாலை குறைத்துக் கொள்ள வேண்டும், வாய் சவடாலால் வீணாய் போனவர்தான் அவர். நாங்கள் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது டிடிவி. தினகரனை கண்டு  பயந்தது உண்மைதான். அவர் வீட்டு காவல் நாயாகக்கூட இருந்தோம். ஆனால், இப்போது அனைவரும் சீறும் சிங்கங்களாக மாறிவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.