அந்தரங்க வீடியோவை வெளியிடுவேன்: எச்சரிக்கும் வெற்றிவேல்; அதிர்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்

Last Modified திங்கள், 1 ஏப்ரல் 2019 (16:10 IST)
மனுசூதனன் அமைதியாக இருக்காவிட்டால் அவரின் அந்தரங்க வீடியோவை வெளியிடுவேன் என அமமுக பிரமுகர் வெற்றிவேல் எச்சரித்துள்ளார்.
 
தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதால் அமைச்சர்கள் மற்றும் கட்சி முக்கிய புள்ளிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பெரம்பூர் மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் வெற்றிவேல் மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
manu
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக முன்னாள் அமைச்சர் மனுசூதனன் என் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கிறார். இது அவரின் வயதுக்கு மரியாதை இல்லை. அவர் அமைதியாக இருக்காவிட்டால், அவரின் அந்தரங்க வீடியோ என்னிடம் உள்ளது. அதனை வெளியிட்டுவிடுவேன். அவரின் வயதுக்காக தான் அமைதியாக இருக்கிறேன் என கூறினார். இதனை பிரபல நாளிதழ் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :