திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 24 மார்ச் 2018 (17:21 IST)

ஓராண்டு சாதனை விழா ; எலிகள் நடத்திய விழா : தினகரன் கிண்டல்

முதல்வர் எடப்பாடி தலைமையிலான ஓராண்டு நிறைவு சாதனை விழா பற்றி ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டி.டி.வி தினகரன் கிண்டலடித்துள்ளார்.

 
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி சமீபத்தில் அதிமுக சார்பில் விழா கொண்டாடப்பட்டது.
 
இந்நிலையில், தஞ்சாவூரில் இதுபற்றி இன்று செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது:
 
எடப்பாடி  அரசு நடத்தியது சாதனைக் கூட்டம் இல்லை. சோதனைக் கூட்டம். எலிகள் நடத்திய விழா.  எடப்பாடி ஆட்சியில் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. ஓ.பி.எஸ் தன்னை யானையாக நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் ஒரு எலி. இவர்களை பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள். கடந்த வருடம் எடப்பாடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஓட்டு போட்டு விட்டு தற்போது சாதனை பற்றி அவர் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
சில காரணங்களுக்காக எங்கள் ஸ்லீப்பர் செல்கள் வெளியே வராமல் இருக்கிறார்கள். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது அவர்கள் செய்ய வேண்டியதை செய்வார்கள். அதுவரை பொறுமையாக இருப்போம்” என அவர் கூறினார்.