வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 22 மே 2018 (14:33 IST)

தமிழகம் தழுவிய மாபெரும் போராட்டம்: எச்சரிக்கும் டிடிவி தினகரன்!

தமிழகம் முழுவதும் அரசு சார்பில் தொடக்கப்பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கிவிட்ட நிலையில், அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்துள்ளதாம். 
 
எனவே, 800-க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது என்கிற செய்தி ஊடகங்களில் வந்துக் கொண்டிருக்கிறது. இது குறித்து டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது, அரசு கல்வி நிலையங்கள் என்பது வணிக நோக்கத்துக்காக நடைபெறுவது கிடையாது. 
 
தமிழகத்தின் மாபெரும் தலைவர்கள் புதிய பள்ளிகள் திறக்கும் புனித பணியினை முன்னெடுத்து வந்துள்ளனர். ஆனால் இந்த அரசோ கல்வி நிலையங்களை மூடிக் கொண்டிருக்கிறது.
 
அற்ப காரணத்தை சொல்லி பள்ளிகளை மூடும் திட்டமென்பது, மூடத்தனத்தின் உச்சக்கட்டம். பழனிசாமி அரசின் இந்த முடிவு, பல்லாயிரக்கணக்கான கிராமப்புற பிள்ளைகளின் கல்வியின் தேவையை நாசமாக்கும். 
 
இந்த முடிவை பழனிசாமியின் அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையெனில், தமிழகம் தழுவிய மிகப்பெரிய போராட்டத்தை பழனிசாமியின் அரசு சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.