திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 21 மே 2018 (19:22 IST)

தமிழகத்தில் 800 அரசு பள்ளிகள் மூடப்படுகிறது? காரணம் என்ன?

தமிழகம் முழுவதும் மாணவர்கள் குறைவாக உள்ள 800 அரசு பள்ளிகளை, பள்ளிக் கல்வித்துறை மூட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
பெரும்பாலும் இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கதான் விருப்பப்படுகின்றனர். மாணவ, மாணவிகளும் தனியார் பள்ளியை நோக்கி செல்ல தொடங்கிவிட்டனர். மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகள், கட்டிடங்கள் மோசமான பள்ளிக்கூடம் போன்றவை கணகெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இந்த ஆண்டு 800 பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபொன்று கடந்த ஆண்டு அரசு பள்ளிகள் மூடப்படுவதாக தகவல்கள் பரவியது. ஆனால் அரசு அப்படி செய்யவில்லை. இந்த முறை கண்டிப்பாக 800 அரசு பள்ளிகளை மூட உள்ளதாக வெளியான தகவல்கள் உறுதியானது கூறப்படுகிறது.