திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: திங்கள், 21 மே 2018 (09:57 IST)

தமிழகத்தில் நிபா வைரஸ் தொற்று இல்லை - சுகாதாரத்துறை செயலாளர்

கேரளாவில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸ் தொற்று தமிழகத்தில் பரவ வாய்ப்பில்லை என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நிபா எனும் அரிய வகை வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. வவ்வால்கள் மூலம் பரவும் இந்த வைரஸ் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. இந்த நிபா வைரஸ் தாக்கி கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் ஒரு செவிலியர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்துள்ளனர். 
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் நிபா வைரஸ் தொற்று இல்லை என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் நிபா வைரஸ் தொற்று ஏற்படாதவாறு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.