1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TTV Dinakaran tweet about his health issue

விரைவில் வீடு திரும்புவேன்; கவலைப்படாதீங்க..! – டிடிவி தினகரன் ட்வீட்!

TTV Dinakaran
அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் வீடு திரும்புவேன் என கூறியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தியை அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உணவு ஒவ்வாமை பிரச்சனை காரணமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன் “சிறிய உடல்நலக் குறைவு (உணவு ஒவ்வாமை) காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

எனவே, கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம். நேரில் பார்க்க வருவதையும் தவிர்க்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விக்ராந்த் போர்க்கப்பல்! – இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பு!