1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (15:33 IST)

திருச்சிற்றம்பலம் ஹிட்… தனுஷின் அடுத்த படங்களுக்கு சூடுபிடிக்கும் வியாபாரம்!

தனுஷின் சமீபத்தைய ரிலீஸான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

தனுஷ் நடிப்பில் அனிருத் இசையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரிலீஸான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்துக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் இரண்டு வாரங்களைக் கடந்துள்ள திருச்சிற்றம்பலம் மூன்றாவது வாரத்திலும் கலக்கி வருகிறது. விரைவில் இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படங்களின் பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் வெற்றியால் தனுஷின் அடுத்த படங்களான நானே வருவேன் மற்றும் வாத்தி ஆகிய படங்களுக்கு எதிர்பார்த்ததை விட வியாபார மதிப்பு அதிகமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த படங்களின் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.