செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2020 (13:53 IST)

நட்டாத்தில் விட்ட இசக்கி: ஒரு வழியா பார்ட்டி ஆஃபிஸ் போட்ட டிடிவி!!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கட்சிக்காக புது ஆஃபிஸை வரும் 12 ஆம் தேதி திறக்க உள்ளதாக அறிவித்துள்ளார். 
 
திமுக, அதிமுக ஆகியக் கட்சிகளுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட அமமுக ஒன்றுமில்லால் போய்விட்டது. தங்களது முக்கிய நிர்வாகிகளை அமமுக அடுத்தடுத்து இழந்து வருவது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 
 
அதுவும், இசக்கி சுப்பையா விலகிய போது கட்சிக்கு அலுவலகம் இல்லாமல் போகும் சூழலும் ஏற்பட்டது. ஏனென்றால், அமமுகவின் தலைமை கட்சி அலுவலகம் இசக்கி சுப்பையா நிறுவனத்துக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது டிடிவி தினகரன் தனது கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் நற்செய்தி ஒன்றை சொல்லியுள்ளார். ஆம், அமமுகவின் தலைமைக் கழக புதிய அலுவலகம் சென்னை ராயப்பேட்டையில் புதிய எழிலோடு உருவாகி இருக்கிறது. 
 
வருகிற 12 ஆம் தேதி காலை 9 மணி அளவில் இதன் திறப்பு விழா நடைபெற உள்ளது. எனவே அமமுக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவரும் வந்து கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது அமமுகவினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.