1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (17:07 IST)

டப்பு டப்புனு விழுந்த 3 விக்கெட்: தினகரனுக்கு வந்த சோதனை!!

டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் இருந்து முக்கிய பொறுப்பில் உள்ள மூன்று பேர் கட்சி மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் அமமுக போட்டியிட்டதே தவிர வெற்றி பெறவில்லை. இதனால் அப்போது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுக மற்றும் திமுகவை நோக்கி படையெடுத்தனர். 
 
கட்சியில் இருந்து பலர் விலகினாலும் இருப்பவர்களை வைத்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டார் டிடிவி தினகரன். உள்ளாட்சி தேர்தலில் கணிசமாக வெற்றியை பதிவு செய்தது அமமுக. இது கட்சிக்குள் இருப்பவர்களுக்கு சற்று தெம்பை கொடுத்தது. ஆனால், உள்ளாட்சி தேர்தலில் சீட்டு கிடைக்காத சிலர் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. 
 
இந்நிலையில், அமமுக சேர்ந்த மாநில அம்மா பேரவை தலைவர் புலவர் பி.எச்.சாகுல்ஹமீது, மதுரை மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிங்கை பிரதீப்குமார், மதுரை மாநகர் மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் ஆர்.கோபிநாத் ஆகியோர் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தனர். இது கட்சிக்குள் இருப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக தெரிகிறது.