1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TTV Dinakaran to meet Sasikala today

சசிகலாவுக்கு என்ன ஆச்சு? டாக்டரோடு பெங்களூரு கிளம்பிய தினகரன்!!

டிடிவி தினகரன்
சசிகலாவை சந்திக்க தினகரன் சிறைத்துறையினரிடம் அனுமதி கோரி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் அவர் வரும் 27 ஆம் தேதி தண்டனை முடிந்து விடுதலையாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்தன.  
 
இதனிடையே திடீரென நேற்று மாலை சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு  கொண்டுசெல்லப்பட்டார். தற்போது அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
இந்நிலையில், சசிகலா உடல்நலம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிய அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், மற்றும் உறவினரும் குடும்ப மருத்துவருமான டாக்டர்.சிவகுமார் பெங்களூருக்கு பயணமாகியுள்ளனர். 
அடுத்த கட்டுரையில்
சசிகலாவுக்கு கொரோனாவா? மூச்சுதிணறலுக்கான காரணம் என்ன??