வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 19 டிசம்பர் 2017 (11:53 IST)

தினகரன் வெற்றி பெறுவதே நல்லதாம் : ஏன் தெரியுமா?

சென்னை ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவதே தமிழகத்திற்கு நல்லது என இணையத்தில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


 
இரு அணிகளும் இணைந்த பின் தினகரனுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் செயல்பட துவங்கினார். தற்போது, அதிமுகவில் மற்றொரு பிரிவாகவே தினகரன் செயல்பட்டு வருகிறார். அவர் பக்கம் சில எம்.பி.க்களும், எம்.எல்.ஏக்களும் இருக்கிறார்கள். இரட்டை இலை சின்னம் கிடைக்காததால், ஆர்.கே.நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக தினகரன் போட்டியிடுகிறார்.
 
இந்நிலையில், தினகரனுக்கு ஆதரவாக நெட்டிசன்கள் களம் இறங்கியுள்ளனர். அதற்கு அவர்கள் சில காரணங்களையும் கூறுகின்றனர்.
 
ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவது அவசியமான ஒன்றாக இருக்கலாம். காரணம்; மருதுகனேஷ் வெற்றி பெற்றால் திமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 89+1=90 ஆக உயரும், அவ்வளவுதான். அதனால் தற்போதைய பாஜக பினாமி ஓ.பி.எஸ்-எடப்பாடி அதிமுக அரசு கவிழப்போவது இல்லை. இந்த மக்கள் விரோத அரசு தொடரவே செய்யும்.
 
ஆனால் டிடிவி தினகரன் வெற்றி பெற்றால் அவர் பின் சில எம்.எல்.ஏக்கள் அணிவகுக்க வாய்ப்பு உள்ளது. அதன் விளைவாக தற்போதைய ஓ.பி.எஸ்-எடப்பாடி அதிமுக கட்சி மெல்ல மெல்ல உடைய வாய்ப்பு உள்ளது. அதன் தொடர்ச்சியாக சட்டமன்றத்தில் போட்டி அதிமுக உருவாக வாய்ப்பு உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி-ஓ.பி.எஸ் அதிமுக அரசு தோற்று ஆட்சி கவிழ வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் மீதான பாஜகவின் மறைமுக மதவாத அதிகாரம் நீங்கும். 
 
இந்த ஆட்சி கவிழ்வது தமிழகத்திற்கு நல்லது. எனவே, டிடிவி தினகரன் வெற்றி பெறுவதே சாலச்சிறந்தது” என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.