1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 19 டிசம்பர் 2017 (21:51 IST)

“சிம்புவை டார்ச்சர் பண்ணோம்” - சந்தானம் உடைத்த ரகசியம்

‘சிம்புவை டார்ச்சம் பண்ணோம்’ என்று யாருக்கும் தெரியாத ரகசியத்தை உடைத்துள்ளார் சந்தானம்.
சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’. சேதுராமன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், சந்தானம்  ஜோடியாக வைபவி ஷாண்டில்யா நடித்துள்ளார். விவேக் காமெடியனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில், ரோபோ சங்கரும்  முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சிம்பு, முதன்முறையாக இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். அவர் இசையில் அனிருத்,  யுவன் சங்கர் ராஜா, லியோன் ஜேம்ஸ், டி.ராஜேந்தர் - உஷா ஆகியோர் பாடியுள்ளனர்.
 
சிம்புவை முதலில் இசையமைக்கக் கேட்டபோது, கொஞ்சம் தயங்கியிருக்கிறார். ஆனால், சந்தானமும், விடிவி கணேஷும் கேட்டுக் கொண்டதற்காக ஓகே சொல்லியிருக்கிறார். ஓகே சொன்னபிறகு எதிலும் பின்வாங்காமல், மளமளவென ட்யூன்களை போட்டுக் கொடுத்துவிட்டாராம் சிம்பு.
 
“பாடல்களின் சூழ்நிலைகளை, நடுராத்திரியில்தான் போன் போட்டு சிம்புவிடம் சொல்வோம். அவரும் பொறுமையாகக் கேட்டு,  அசத்தலான ட்யூன்களைப் போட்டுக் காட்டுவார். இப்படி நிறைய சிம்புவை டார்ச்சர் பண்ணோம். ஆனால், இறுதி அவுட்புட் அருமையாகக் கிடைத்திருக்கிறது” என்கிறார் சந்தானம்.