1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TTV Dinakaran says udhayanidhi speech is wrong

உதயநிதி பேசியது தவறு..ஆனால் தலைக்கு விலை வைப்பது காட்டுமிராண்டித்தனம்: டிடிவி தினகரன்..!

உதயநிதி
சனாதனம் குறித்து உதயநிதி பேசியது தவறு என்றும் ஆனால் அதே நேரத்தில் ஒரு அமைச்சரின் தலைக்கு விலை வைப்பது என்பது காட்டுமிராண்டித்தனம் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் பேட்டி அளித்துள்ளார்.
 
 இன்று செய்தியாளர்களை டிடிவி தினகரன் சந்தித்தார். அப்போது உதயநிதியின் சனாதனம் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த அவர் மத உணர்வை பாதிப்பது போல் உதயநிதி பேசியது தவறு என்றும் சனாதனம் என்பது என்னவென்று தெரியாமல் பேசி உள்ளார் என்று தெரிவித்தார். 
 
ஆனால் அதே நேரத்தில் அமைச்சர் தலைக்கு விலை வைப்பது காட்டுமிராண்டித்தனம் என்றும் கூறினார்.
 
மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமாகாது என்றும் அவர் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்தார். 
 
மேலும் தீய சக்தி ஜெயித்து விடக்கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம் என்றும் அதனால் தான் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட திட்டமிட்டு இருப்பதாகவும் 40 தொகுதிகளில் நாங்கள் தனியாக போட்டியிடுவோம் என்றும் கூறினார்.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
காங்கிரஸை கூட்டணியில் இருந்து வெளியேற்றினால் திமுகவுக்கு ஆதரவு: சீமான்