செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated: ஞாயிறு, 27 நவம்பர் 2022 (13:32 IST)

திமுக கூட்டணி, எடப்பாடி கூட்டணி பலம் இழந்து வருகிறது.. டிடிவி தினகரன்

dinakaran
திமுக கூட்டணி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணி பலம் இழந்து வருகிறது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
திமுக மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்துள்ளதாகவும் திமுக தலைமையிலான கூட்டணி பலம் இழந்து வருவதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
 
மேலும் திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் இருந்தாலும் மக்கள் ஆதரவு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி போலவே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியும் பலம் இழந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். 
 
இந்த நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மக்களுக்கு மின்சாரத் துறை உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva