1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 4 ஜூலை 2022 (16:58 IST)

கே.பி.முனுசாமி வழக்கு தொடர்ந்தால் சந்திக்கத் தயார் - டிடிவி தினகரன்

ttv dinakaran
கேபி முனுசாமி வழக்கு தொடர்ந்தால் அந்த வழக்கை சந்திக்க தயார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அதிமுகவில் தற்போது ஏற்பட்டிருக்கும் சர்ச்சை குறித்து டிடிவி தினகரன் தனது கருத்தை ஊடகங்கள் மூலம் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் இதற்கு மேல் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்தால் நீதிமன்ற படி ஏற வேண்டிய நிலை ஏற்படும் என்று கேபி முனுசாமி எச்சரிக்கை செய்தார் 
 
இதற்கு பதிலளித்துள்ள டிடிவி தினகரன், கேபி முனுசாமி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என்று கூறியதோடு நான் தனிக்கட்சி தொடங்கி விட்டேன் இனி அதிமுகவில் என்ன நடந்தால் எனக்கென்ன என்று தெரிவித்தார் 
 
மேலும் அதிமுக பொதுக்குழு வந்தவர்களுக்கு பணம் தரப்பட்டதாக எனக்கு வந்த தகவலைத் தெரிவித்தேன் என்றும் என் மீது கேபி முனுசாமி மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என்றும் தெரிவித்தார்