திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 30 ஜூன் 2022 (17:32 IST)

எங்களுடைய சிலீப்பர் செல்கள் இன்னும் அதிமுகவில் இருக்கிறார்கள்: டிடிவி தினகரன்

dinakaran
எங்களுடைய ஸ்லீப்பர் செல்கள் இன்னும் அதிமுகவில் இருக்கிறார்கள் என டிடிவி தினகரன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே உச்சகட்ட மோதல் நடந்து வரும் நிலையில் செய்தியாளர்களை இன்று டிடிவி தினகரன் சந்தித்தார் 
 
அப்போது அதிமுகவில்  இன்னும் எங்களுடைய ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள் என்றும் தேவைப்படும் போது அவர்களை பயன்படுத்துவோம் என்றும் கூறியுள்ளார் 
 
ஏற்கனவே அதிமுகவில் இருந்த சிங்கங்கள் அனைவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வந்து விட்டனர் என்றும் அதிமுகவின் தற்போதைய நிலையை பார்த்தால் வருத்தமாக உள்ளது என்றும் அதே நேரத்தில் அதிமுக எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினார் 
 
அடுத்து கட்சியின் பிரச்சனையில் நாங்கள் தலையிட முடியாது என்றும் கூறிய டிடிவி தினகரன் ஒரு கட்சியின் தலைவரை தொண்டர்கள் தான் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.