தொடர்புடைய செய்திகள்
- வியாபாரிகள், விவசாயிகளுக்கு சலுகை! – தமிழக அரசு அறிவிப்பு!
- அடிக்கிற வெயில்ல 21 நாள்னா சும்மாவா..? காவலர்களுக்காக ஈபிஎஸ்!!
- வெண்டிலேட்டர் வாங்கதானே காசு கொடுத்தார்! மறுக்காதீங்க! – செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் ட்வீட்!
- ஜூன் வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா??
- அமைச்சரை கொரோனாவோடு தொடர்புப்படுத்தி பேசிய நபர்! – கைது செய்த போலீஸார்!
இவ்வோ ஃபேன் ஃபலோயிங்கா? டிரெண்ட் லிஸ்டில் தலைக்காட்டும் டிடிவி!!
அமமுக பொதுச்செய்ளாலர் டிடிவி தினகரன் சமூக வலைத்தளமான டிவிட்டர் பக்கத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறார்.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு அமல்படுத்திய இந்த ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வர இன்னும் ஒரு வாரம் மட்டும் இருப்பதால் மக்கள் அனைவரும் ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு பின்னர் இயல்பு நிலை திரும்பிவிடும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். ஆனால், தற்போதைய நிலைமையை பார்த்தால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றே தெரிகிறது.
இந்நிலையில் அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரன், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தி பின்னர் தேவைப்பட்டால் ஊரடங்கை மேலும் சில வாரங்கள் நீடிக்கவேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதோடு, மக்களுக்கு சேவையாற்றி வரும் அம்மா உணவகங்களை தமிழகம் முழுவதும் நடமாடும் வகையில் செயல்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனால் தற்போது டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறார்.
தேவைப்பட்டால் ஊரடங்கை மேலும் சில வாரங்கள் நீடிக்கவேண்டும்:
— TTV Dhinakaran (@TTVDhinakaran) April 7, 2020
அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும் !
தமிழகம் முழுவதும் நடமாடும் அம்மா உணவகங்களைச்
செயல்படுத்த வேண்டும் !! pic.twitter.com/BdVSmxPwSJ
அடுத்த கட்டுரையில்
