திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 டிசம்பர் 2020 (16:51 IST)

நீங்க யோக்கிய சிகாமணிதான்; கொஞ்சம் நாகரீகமா பேசுங்க! – ஸ்டாலினுக்கு டிடிவி கண்டனம்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக மு.க.ஸ்டாலின் மற்றும் ஆ.ராசாவுக்கு அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக – திமுக இடையேயான வாக்குவாதங்களும் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சமீபகாலமாக முன்னாள் அதிமுக பொதுசெயலாளரான ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு குறித்து பல இடங்களில் பேசி வரும் ஆ.ராசா நீதிமன்ற தீர்ப்பில் அவரை குற்றவாளி என்று குறிப்பிட்டுள்ளதாகவும் பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆ.ராசா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நீண்ட அறிக்கை வெளியிட்ட அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் “‘உலகமகா யோக்கிய சிகாமணி’களான மு.க.ஸ்டாலினும், ஆ.ராசாவும் நாகரீகத்துடன் பேச வேண்டும்! புரட்சித்தலைவி அம்மா அவர்களைப் பற்றி பேச ‘ஊழலின் ஊற்றுக்கண்களான’ இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக சொத்து குவிப்பு வழக்கை பேசுபொருளாக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.