திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 டிசம்பர் 2020 (13:02 IST)

எனக்கு பட்டம் குடுத்ததுக்கு தேங்க்ஸ்..! இந்தாங்க உங்களுக்கு ஒன்னு! – எடப்பாடியாரை பங்கம் செய்த ஸ்டாலின்!

மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி ‘அறிக்கை நாயகன்’ என பட்டமளித்த நிலையில் அதை பெருமையுடன் ஏற்றுக் கொள்வதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குவாரி டெண்டரில் அதிமுக அரசு ஊழல் செய்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தொடர் குற்றசாட்டுகள் வைத்த நிலையில் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி திமுக வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் அளித்தார். மேலும் மு.க.ஸ்டாலின் தனது இருப்பை காட்டிக் கொள்ள அடிக்கடி அறிக்கை விடுத்து வருவதாகவும், அதனால் அவருக்கு அறிக்கை நாயகன் பட்டம் அளிப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில் தற்போது அதுகுறித்து பேசியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “முதல்வர் பழனிசாமி எனக்கு அளித்த அறிக்கை நாயகன் பட்டத்தை பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறேன். எனக்கு பட்டம் கொடுத்தவருக்கு நான் திரும்ப கொடுக்க வேண்டுமல்லவா..! அதனால் அவருக்கு நான் “ஊழல் நாயகன்” என்ற பட்டம் வழங்குகிறேன்” என கூறியுள்ளார்.