புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

சட்டமன்ற தேர்தலில் சீமான்… இதுவரைக் கடந்து வந்த பாதை!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திரைப்பட இயக்குனராகவும், திராவிட இயக்க ஆதரவாளராகவும் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டு அரசியலுக்கு வருகை தந்த சீமான், ஒரு கட்டத்தில் தன்னை தமிழ் தேசிய வாதியாக அறிவித்துக் கொண்டார். மேலும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளின் காலத்தில்தான் தமிழகம் சீரழிந்தது என்ற அரசியல் முழக்கத்தை வைத்து வருகிறார். திராவிடக் கட்சிகள் என்று சொன்னாலும் அதிமுகவை விட திமுகவின் மீதே அதிக விமர்சனங்களை அவரின் நாம் தமிழர் கட்சி வைத்து வருகிறது. 2011 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக சீமான் பிரச்சாரம் செய்தார்.
2016 ஆம் ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளில் கூட்டணி வைக்காமல் தனது வேட்பாளர்களைக் களமிறக்கினார். ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றிப் பெற முடியவில்லை. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு தேர்தலிலும் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இதில் 50 சதவீதம் பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற அம்சம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
2016 தேர்தல் – கடலூர் – தோல்வி
2021 தேர்தல் – திருவொற்றியூர்