1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2017 (15:47 IST)

விஷாலை நேரில் சென்று சந்தித்த தினகரன்

நடிகர் விஷால் அரசியலுக்கு வந்தால் மகிழ்வேன் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.


 

 
இரண்டு நாட்களுக்கு முன் நடிகர் விஷாலின் தங்கை திருமணம் மிக சிறப்பாக நடைப்பெற்றது. அதில் சினிமா துறையினர், அரசியல் தலைவர்கள் என பலரும் பங்கேற்றனர். டிடிவி தினகரனால் திருமணத்துக்கு செல்ல முடியவில்லை. இதனால் இன்று விஷாலை அவரது வீட்டில் நேரில் சென்று சந்தித்தார். 
 
மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு விஷால் வீட்டில் இருந்து திரும்பிய தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
வெளியூரில் இருந்ததால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது. அதானல்தான் இன்று வாழ்த்துச் செல்ல வந்தேன். சகோதரர் விஷாலுக்கு தலைமைப் பண்பு உள்ளது. அவர் அரசியலுக்கு வந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்றார்.
 
அண்மையில் நடிகர் செந்திலை தினகரன் அதிமுகவின் அமைப்பு செயலாளர் பதவியில் அமர்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று விஷாலை நேரில் சென்று சந்தித்தது கூட அரசியல் குறித்த சந்திப்பாக இருக்கலாம் என பேசப்படுகிறது.