1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TTV support MLA come out of resort

கை விரித்த ஆளுநர் ; தினகரன் எடுத்த அதிரடி முடிவு

TTV
எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் கை விரித்து விட்ட நிலையில், ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அங்கிருந்து வெளியேற முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இழந்து விட்டதாகவும், அவருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுரிடம் மனு கொடுத்தனர். இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சட்டமன்றத்தை கூட்டவும், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவும் ஆளுநர் உத்தரவிட வேண்டும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட பல கட்சிகள் கோரிக்கை வைத்தனர்.
 
ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில் சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என ஆளுநர் இன்று கைவிரித்து விட்டார். 


 

 
எனவே, ஒரு வார காலமாக ரிசார்ட்டில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் விரைவில் அங்கிருந்து வெளியேறலாம் எனத் தெரிகிறது. மேலும், அவர்கள் அனைவரையும் டெல்லி அழைத்து செல்ல தினகரன் திட்டமிட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
About Writer
Murugan
அடுத்த கட்டுரையில்
எடப்பாடி பழனிச்சாமி விரைவில் ராஜினாமா - தினகரன் அதிரடி