திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2017 (13:53 IST)

விடுதியை விட்டு வெளியேறும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்?

புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நாளை விடுதியை காலி செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
ஓபிஎஸ் அணி எடப்பாடி அணியுடன் இணைந்ததை அடுத்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரிடம் தாங்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர். இதையடுத்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும் புதுச்சேரி தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
 
சட்டசபையை கூட்டி எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் ஆளுநர் இன்று இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். இந்நிலையில் விடுதியில் இருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நாளை விடுதியை காலி செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.