தொடர்புடைய செய்திகள்
- முடிந்தால் நோட்டாவை ஜெயிச்சு காட்டட்டும்! கமலுக்கு சவால் விடுத்த ஜெயகுமார்
- இருட்டறையில் முரட்டு குத்து பட இயக்குனரின் அடுத்த கில்மா...!
- காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுழழும் ரஜினி; ஸ்டாலினுடன் சந்திப்பு!
- மீண்டும் வருவேன்... பெண்கள் கூட்டத்தில் கெத்து காட்டிய உதயநிதி ஸ்டாலின்!
- கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வருவதா..? ஸ்டாலின் கொள்கைதான் என்ன?
சங்கீத வித்வான்கள் என்றால் கேவலமா? ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் பதிலடி
திமுகவின் எதிரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்று நெட்டிசன்கள் அடிக்கடி பதிவுகளும் மீம்ஸ்களும் போட்டு வருகின்றனர். சமீபத்தில் இந்து திருமணங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மு.க.ஸ்டாலினுக்கு அவரது கூட்டணி கட்சியில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது
இந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து கருத்து கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'இந்த பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படாத, உதவாக்கரை பட்ஜெட் என்றும், சங்கீத வித்வான் பாடுவதை போல சொன்னதையே திரும்பத் திரும்ப சொன்னார் ஓ.பி.எஸ் என்றும், இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கான பட்ஜெட் அல்ல என்றும் வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்தும் பட்ஜெட் என்றும் விமர்சனம் செய்தார்.
மு.க.ஸ்டாலினின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயகுமார், 'சங்கீத வித்வான்கள் என்றால் கேவலமா? அவர்கள் அனைவரும் ஞானம் பெற்றவர்கள். 7 சுரங்களை பற்றி தெரியாதவர்கள் சங்கீத வித்வான்களை பற்றி பேசலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
