தொடர்புடைய செய்திகள்
- அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி
- சீமான் வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன்? சென்னை உயர் நீதிமன்றம்..!
- பணத்தை திரும்பி தர தயார், ஜாமின் கொடுங்கள்.. தயாரிப்பாளர் ரவீந்தர் தரப்பு வாதம்..!
- அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா? இன்று தீர்ப்பு..!
- கொரோனா குமார் படத்துக்கு வாங்கிய அட்வான்ஸைத் தர தேவையில்லை… சிம்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதம்!
டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனு தள்ளுபடி.. நீதிமன்றம் அதிரடி..!
ஆபத்தான முறையில் பைக்கை இயக்கியதாக பிடிஎஃப் வாசன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் சமீபத்தில் அவர் பதினைந்து நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்
இந்த நிலையில் அவரது ஜாமீன் மனு இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில்அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வாசன் சென்று கொண்டிருந்தபோது ஹீலிங் செய்ய முயன்றார். அப்போது அவரது பைக் விபத்துக்குள்ளாகி அவர் படுகாயம் அடைந்தார்
இதனை அடுத்து ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட சில பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர் தனக்கு ஜாமீன் வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனு என்று தள்ளுபடி செய்யப்பட்டது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
