புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (11:06 IST)

உண்மையை விசாரிக்காமல் போட்டோஷாப்பால் குட்டு வாங்கிய தமிழக பாஜக!

திமுக தலைவர்  ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள் பேசாத ஒன்றை  பேசியதாக கூறி செய்தி சேனல்களின் கார்டில் போட்டோஷாப் செய்து விஷமாக சிலர் பரப்பி விடுகிறார்கள்.


அந்த வகையில்  நேற்று நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தொழில் நகரமாம் திருப்பூரில் புதிய கொண்டுவருவோம் என செய்தியாளர் சந்திப்பில் ஸ்டாலின் கூறியதாக நியூஸ் 7 தொலைக்காட்சியின் ப்ரேக்கிங் நியூஸ்* வடிவில் பொய் செய்தி ஒன்று போட்டோ ஷாப்பாக பரவி வந்தது. 
 
 இதன் உண்மைத் தன்மையை அறியாமலேயே, அ.தி.மு.க., பி.ஜே.பி. ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அவர்களோடு முடிந்துபோயிருந்தால் சரி, தமிழ்நாடு பி.ஜே.பி.யும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த போலியான போட்டோஷாப் செய்தியை நேற்று இரவு  பதிவிட்டது.

பதிவில், "திருப்பூரில் துறைமுகமா!! ஒன்பது கிரகங்கள் உச்சத்தில் இருக்கும் ஒருவரால் தான் இந்த லெவலுக்கு யோசிக்க முடியும்" என்று நக்கலாக கமெண்ட் வேறு அடித்திருந்தனர். இது போலி செய்தி என்று கண்டனக் குரல்கள் எழும்ப, பதிவிட்ட ஒரு மணிநேரத்திலேயே செய்தி நீக்கப்பட்டது.