மீண்டும் சொதப்பிய திருச்சி-துபாய் விமானம்: 114 பயணிகள் உயிர்தப்பினர்
திருச்சி விமானநிலயத்தில் இருந்து துபாய் செல்லும் விமானம் தொழில்நுட்பக் காரணமாக தரையிறக்கப்பட்டது.
கடந்த 12-ந்தேதி திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்குப் புறப்பட்டு சென்ற விமானம், விமான நிலையத்தின் சுற்றுச்சுவரில் மோதிச் சென்ற சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது. அதிர்ஷ்டவசமாக அதில் பயணித்தப் பயணிகள் உயிர்தப்பினர். ஆனால் அந்த சர்ச்சை அடங்குவதற்குள் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
நேற்றிரவு திருச்சியில் இருந்து துபாய்க்கு 114 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட விமானம், ஓடுதளத்தில் பறக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இஞ்சினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணம நிறுத்தப்பட்டதாக விமானி தெரிவித்துள்ளார். இதனால் 114 பயணிகளின் உயிர் காக்கப்பட்டுள்ளது.