புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 1 ஆகஸ்ட் 2020 (15:50 IST)

நடவடிக்கைகளுக்குப் பின்னும் திருச்சியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு இரண்டு மடங்கான கட்டுப்படுத்தப்பட்ட பகுதி!

திருச்சியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வருவது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகத்தில் ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் இருந்த மாவட்டங்களில் திருச்சியும் ஒன்று. ஆனால் இப்போது அங்கே பாதிப்புகள் அதிகமாகிக் கொண்டே வருகின்றனர். அதிலும் திருச்சி மாநகராட்சியிலே பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்ட 4146 பேரில் 2556 பேர் திருச்சி மாநகராட்சியை சேர்ந்தவர்கள். அதே போல பலி எண்ணிக்கையில் 38 பேர் திருச்சியை சேர்ந்தவர்கள். ஒட்டுமொத்தமாக திருச்சி மாவட்டத்தில் இறந்தவர்கள் 60 பேர்.

இந்நிலையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகள் மூடப்பட்டாலும், இன்னும் கொரோனா பாதிப்பு குறையவில்லை. மொத்தம் 12 இடங்களாக இருந்த கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் இப்போது 25 ஆகியுள்ளன. இது திருச்சி வாழ் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.