திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 26 மார்ச் 2021 (07:22 IST)

கோவையை அடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. அதிரடி மாற்றம்!

கோவையை அடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. அதிரடி மாற்றம்
தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் ஒரு பக்கம் தீவிரமாக பிரசாரம் செய்து வரும் நிலையில் தேர்தல் ஆணையம் தேர்தலை சிறப்பாக நடத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது 
 
அந்த வகையில் கடந்த சில நாட்களாக அதிரடியாக காவல்துறை அதிகாரிகளை ஒட்டுமொத்தமாக மாற்றி வருகிறது தேர்தல் ஆணையம். சமீபத்தில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல்துறை ஆணையரை மாற்றிய தேர்தல் ஆணையம், 53 டிஎஸ்பிக்கள் மற்றும் ஏஎஸ்பிக்களை மாற்றியது
 
இந்த நிலையில் தற்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பிஐ ஆகிய இருவரையும் அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது தேர்தல் ஆணையம். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் எஸ்பி இராஜன், துணை ஆட்சியர் நிஷாந்த் ஆகியோர் பணியிட மாற்றம் செய்திருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
 
இதனை அடுத்து திருச்சி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக திவ்யதர்ஷினி அவர்கள் பதவி ஏற்பார் என்றும், எஸ்பியாக மயில்வாகனன் அவர்கள் பதவியேற்பார் என்றும் தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தலை முன்னிட்டு அதிரடியாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது