திருட்டு ரயில் திமுக - ட்ரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்
சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரில் ‘திருட்டு ரயில் திமுக’ என்கிற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.
டிவிட்டரில் ஒவ்வொரு நாளும் ஒரு அரசியல் கட்சி அல்லது தனிப்பட்ட நபரை குறி வைத்து சில ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்படுகின்றன. பல நபர்களால் அந்த ஹேஷ்டேக் பயன்படுத்தப்படும்போது, அது டிரெண்டிங்கில் வருகிறது.
இந்நிலையில், டிவிட்டரில் ‘திருட்டு ரயில் திமுக’ என்கிற ஷேஷ்டேக் பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் திமுகவை குறிவைத்து இந்த ஷேஷ்டேக்கை அதிகமாக பயன்படுத்தி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதாவது, தான் திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் ஏறி சென்னை வந்தவன் என ஒருமுறை திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். எனவே, அதையே ஹேஷ்டேக்காக பயன்படுத்தி திமுகவுக்கு எதிராக இவர்கள் டிவிட் செய்து வருகின்றனர்.