வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 21 ஜூலை 2018 (19:56 IST)

கட்டம் என்ன சொல்லுது: முதல்வரின் எதிர்காலத்தை கணித்த டிடிவி தினகரன்!

சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கின் குற்றாவாளியாக சிறைக்கு செல்லும் முன்னர் எஅடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக நியமித்தார். ஆனால், இப்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒன்றிணைந்து சசிகலாவின் குடும்பத்தினரை கட்சியை விட்டு விலக்கி வைத்துள்ளனர். 
 
இந்நிலையில் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பின்வருமாறு பேசினார், பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார் என்ற பயம் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளது.
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன நடக்கபோகுது என்று எனக்கு தெரியும். எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது சசிகலாதான். வருமானவரி சோதனையில் சிறிய அளவுதான் பிடிப்பட்டுள்ளது. பிடிபடாத பணம் ஏராளமாக உள்ளது. கொள்ளையடித்த பணம் தான் ஒப்பந்ததாரர் வீட்டில் சிக்கியுள்ளது.
 
எடப்பாடி ஆட்சியை மத்திய அரசு தாங்கி பிடிக்கக்கூடாது. பாஜக ஒரு மதவாத கட்சி, எனவே பாஜக உடன் என்றைக்குமே கூட்டணி இல்லை. எடப்பாடி தொகுதி மட்டுமல்ல 234 தொகுதியிலும் போட்டியிட்டு, துரோகம் இழைத்தவர்களை வீழ்த்தவேண்டும் என்றார்.