1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TRB Raja sworn as minister today

அமைச்சராக பதவியேற்கிறார் டிஆர்பி ராஜா.. கவர்னர் மாளிகையில் பதவிப்பிரமாணம்..!

DMK MLA TRP Raja
தமிழகத்தின் புதிய அமைச்சராக அறிவிக்கப்பட்ட டிஆர்பி ராஜா இன்று கவர்னர் மாளிகையில் பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் ஏற்படும் என்று செய்திகள் வெளியான நிலையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் விடுவிக்கப்பட்டதாகவும் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா பதவி ஏற்க இருப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 
 
இதனை அடுத்து இன்று சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் டிஆர்பி ராஜா அமைச்சராக பதவி ஏற்கிறார் என்றும் அவருக்கு கவர்னர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
இந்த பதவி ஏற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய அமைச்சர் பதவி ஏற்பு விழா முடிந்த பிறகு அவருக்கு எந்த துறை என அறிவிக்கப்படும் என்றும் அதுமட்டுமின்றி வேறு சில அமைச்சர்களுக்கும் துறைகள் மாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
இன்னும் 2 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!