வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 9 மே 2023 (21:51 IST)

தமிழக அமைச்சரவையில் மாற்றம்- அமைச்சர் நாசர் நீக்கம்!

MK Stalin
தமிழ்நாட்டில் முதல்வர் முக. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  பேசியதாக பரவலான ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, முதல்வர் முக. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து தூக்கப்படுவார்  அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  மற்றும் சில அமைச்சர்கள் நீக்கப்படுவர் எனத்  தகவல் வெளியானது.

இது அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில், இன்று அமைச்சரவை மாற்றம்  நடைபெற்றுள்ளது.

அதன்படி,  தமிழக அமைச்சரவையில் இருந்து  பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டுள்ளார். டி.ஆர்.பி.ராஜாவுக்கு  தொழில்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவையில்  டி..ஆர்.பி. ராஜாவுக்கு இடம் வழங்கப்பட்டுள்ள  நிலையில், வரும் 11 ஆம் தேதி அமைச்சராகப் பதவியேற்கவுள்ளார்.