1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 5 ஜனவரி 2024 (07:37 IST)

ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள கூடாது: போக்குவரத்து துறை உத்தரவு

போக்குவரத்து ஊழியர்கள் ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்துள்ள நிலையில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள கூடாது என்றும் பணிக்கு வரவேண்டும் என்றும் போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து ஜனவரி 9ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடந்த போவதாக அறிவித்துள்ளனர்.


இந்த நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் எனவும், வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் எனவும் ஊழியர்கள் பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு என அனைத்து விதமான விடுப்புகளையும் தவிர்த்து, பணிக்கு வந்து சீரான பேருந்து இயக்கம் அமைய உதவ வேண்டும் என்றும் போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

போக்குவரத்து ஊழியர்கள், வரும் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில் சேம மற்றும் தினக்கூலி பணியாளர்கள் கட்டாயம் பணிபுரிய வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவு


Edited by Siva