செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2024 (16:12 IST)

LPG டேங்கர் லாரிகள் கடந்த 1ம் தேதி முதல் வேலை நிறுத்தம்!

lpg lorry
எல்.பி.ஜி டேங்கர் லாரி சங்க நிர்வாகிகளுடன் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் நடத்திய 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கவுள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.

LPG டேங்கர் லாரிகளில் உதவியாளர்கள் அதாவது கிளீனர்கள் கட்டாயம் அமர்த்த அவெண்டும் என்று எண்ணெய் நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த  நிபந்தனைக்கு எதிராக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

எல்.பி.ஜி டேங்கர் லாரி சங்க நிர்வாகிகளுடன் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் நடத்திய 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று தோல்வியடைந்தது. எனவே வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடரவுள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கர்நாடகா மங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சமையல் எரிவாயு ஏற்றாமல் 1000க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் கடந்த 1 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.