1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 9 பிப்ரவரி 2023 (08:28 IST)

பேருந்தில் ஆபத்தான பயணம் செய்யும்ன் மாணவர்கள் மீது புகார்: போக்குவரத்து துறை

bus student
பேருந்தில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள் மீது புகார் தரலாம் என மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார். 
 
மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களின் பொறுப்பு என்றும் பாதுகாப்பற்ற முறையில் மாணவர்கள் பயணிக்க முயற்சித்தால் பேருந்தை நிறுத்தி அறிவுரை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
மாணவர்கள் அறிவுரையை ஏற்கவில்லை என்றால் காவல் நிலையத்துக்கு அல்லது அவசர அழைப்பு எண்ணான 100ஐ அழைத்து  தகவல் தரலாம் என்றும் அறிவுரை கேட்காதவர் மீது போக்குவரத்து கழகத்திடம் ஓட்டுநர், நடத்துனர் புகார் அளிக்கலாம் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது
 
சென்னையில் மாணவர்கள் தொடர்ச்சியாக பேருந்துகளில் ஆபத்தான பயணம் செய்து வருவதை அடுத்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
 
Edited by Siva